சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்ப்பாளராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும் பணியில் ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
For overseeing and addressing concerns related to student grievances, the @iitmadras Board of Governors appoints Ms. G. Thilakavathi IPS as ‘Student Ombuds’, effective today onwards.#BeHappy pic.twitter.com/vgthvgGLBY
— IIT Madras (@iitmadras) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For overseeing and addressing concerns related to student grievances, the @iitmadras Board of Governors appoints Ms. G. Thilakavathi IPS as ‘Student Ombuds’, effective today onwards.#BeHappy pic.twitter.com/vgthvgGLBY
— IIT Madras (@iitmadras) November 7, 2023For overseeing and addressing concerns related to student grievances, the @iitmadras Board of Governors appoints Ms. G. Thilakavathi IPS as ‘Student Ombuds’, effective today onwards.#BeHappy pic.twitter.com/vgthvgGLBY
— IIT Madras (@iitmadras) November 7, 2023
சென்னை ஐஐடியில் கரோனா தொற்றுக்குப் பின்னர் மாணவர்கள் மன அழுத்தத்தின் காரணமாகத் தற்கொலைகள் செய்து கொள்வது நிகழ்ந்து வந்தது. மேலும், கரோனா காலத்தில் சரியாகப் படிக்க முடியாத மாணவர்கள் வேலைக்குச் செல்வதற்கான முன் நேர்காணலில் தேர்வாக முடியாத சில சூழல் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் மன அழுத்தத்துடன் மாணவர்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஆசிரியர் மாணவர்களிடையே சரியான புரிதல் இல்லாதது போன்றவை காரணங்களாக மாணவர்கள் மன அழுத்தத்திற்குள்ளானதாகக் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி சார்பில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு மன நல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, மாணவர்கள் தொடர் தற்கொலையைத் தடுப்பதற்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பல்வேறு தகவல்களைத் திரட்டியது. அதனுடைய அறிக்கையைச் சென்னை ஐஐடிக்கு அளித்தது.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளைத் தீர்ப்பதற்கு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனச் சென்னை ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) ஜி.திலகவதி, 'மாணவர் குறைதீர்ப்பு'களாக (முறைமன்ற நடுவர்) நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 7, 2023 முதல் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், பாதுகாப்பான வளாக சூழலைப் பராமரிப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை ‘மாணவர் குறைதீர்ப்பு’ நியமனம் குறிக்கிறது. மாணவர்களின் குறைகள், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களைக் கண்காணிப்பார் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை உறுதிசெய்து, ஐஐடியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, "சென்னை ஐஐடி எப்போதும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், திலகவதியை மாணவர் குறைதீர்ப்பாளராக நியமித்துள்ளோம். மாணவர்களின் கவலைகள் கேட்கப்படுவதையும், உடனடியாகவும் நியாயமாகவும் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய அவர் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றுவார்.
மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பாதுகாப்பான வளாக சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மாணவர் குறைதீர்ப்பாளர்கள் மாணவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி அவர்களுக்கு ஆதரவை வழங்கும். கல்வி நிறுவன நிர்வாகம், மாணவர் குறைதீர்ப்புக் குழுவுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, குறைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!