மெட்ராஸ் ஐஐடியில் ஆண்டுதோறும் நடைபெறும் சாஸ்திரா எனும் தொழில்நுட்ப விழா இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டின் அனைத்து நிகழ்வுகளும் இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்த விழா ஆன்லைன் நடைபெற உள்ளது.
அண்மையில் ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல பேச்சாளர்கள் ‘ஸ்பாட்லைட் லெக்சர்' எனப்படும் நிகழ்வில் பேசவுள்ளனர். வணிக அதிபர்கள், வெற்றிகரமான தொழில்முனைவோர் முதல் நோபல் பரிசு பெற்றவர்கள் வரை பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் ' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) முதன்மை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சாமிநாதன், நோபல் பரிசு பெற்ற கிராமீன் பேங்க், பேரி பேரிஷ் ஆகியோர் மாணவர்களிடையே உரையாற்றவுள்ளனர். இந்த ஆண்டின் சிறப்பம்சமாக விர்ச்சுவல் மேப் ஒன்றை உருவாக்கவுள்ளனர். இந்த வரைப்படத்தை பயன்படுத்தி ஐஐடி வளாகத்தில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பார்வையாளர்கள் செல்லமுடியும். இந்த விழாவில் பல்வேறு பயிலரங்கங்கள், போட்டிகளை நடத்த ஐஐடி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாஸ்த்ரா 2021: ஐஐடி-யின் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சிக்கு பதிவுசெய்து விட்டீர்களா!