ETV Bharat / state

ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மோசடி; விரைவில் பிரச்சினை தீரும்.. இயக்குநர் லட்சுமி நாராயணன் வீடியோ வைரல்..! - லட்சுமி நாராயணன்

IFS scam: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு குறித்து ஐஎப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் லட்சுமி நாராயணன் வீடியோ வைரல்
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மோசடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 11:46 AM IST

ஐ.எப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர் வீடியோ

சென்னை: வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎப்எஸ் (IFS) நிதி நிறுவனத்தில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். இந்நிலையில், இந்த நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் நபர்களிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு பெற்று ஏமாற்றியதாக ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களான லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன் மற்றும் ஏஜென்ட்டுகள் குப்புராஜ், சரவணகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஐ.எப்.எஸ் நிர்வாகிகள் 13 பேர் மீது கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் 57 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிர்வாகிகளின் சொத்துகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக, ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளின் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வகையில், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள லட்சுமி நாராயணன் வீட்டில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஜனார்த்தனனின் வீடு, மற்றும் ஐ.எப்.எஸ் முகவர் குமாரராஜா ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முக்கிய தரகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று உள்ளதால் அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிக வட்டி தருவதாக கூறி ரூ.6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்த புகாரில் துபாயில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் பண மோசடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “பண மோசடி குறித்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். இறுதியாக, இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ள நிலையில், இந்தாண்டுக்குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எனவே, என்னை ஜி-மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு..பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.