சென்னை : பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் பெயரை தமிழில் எழுதும் பொழுது முதலில் எழுதப்படும் தந்தை அல்லது தாய் பெயரின் தலைப்பு எழுத்தை தமிழில் எழுத வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழில் தங்கள் பெயரை எழுதும்போது முதலில் தலைப்பு எழுத்து எனப்படும் initial முதலில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு பெயரை தமிழில் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், " பள்ளிக்கு மாணவர்கள் அளிக்கும் விண்ணப்பம் வருகைப்பதிவேடு பள்ளி ,கல்லூரி முடித்து பெறுகின்ற சான்றிதழ் வரை அனைத்திலும் தமிழ் முன்னெழுத்து initial தமிழ்பெயருக்கு முன் வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் கையெழுத்திட்டால் முன்னெழுத்துடனேயே கையெழுத்து இடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக பள்ளி தகவல் மேலாண்மை இணையப்பக்கத்தில் பராமரிக்கப்படும் மாணவர்களின் 30 பதிவேடுகளில் மாணவர்கள்,பெற்றோர்கள் பாதுகாவலர் பெயர்கள் தமிழில் பதிவேற்றம் செய்யும் போது அதனை தமிழ் முன்னெழுத்துடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்... அண்ணா பல்கலைக்கழகம்