ETV Bharat / state

பரப்புரைக்கு சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மோட்டார் வாகன சட்டம்

தேர்தல் பரப்புரையின்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் ஓட்டுநரின் உரிமம் ரத்துசெய்யப்படும் எனப் போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.

if people are loaded into a truck for a campaign Driving license revoked

author img

By

Published : Mar 10, 2021, 3:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கட்சியினர் பலர் பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிவந்து பரப்புரைகளில் பங்கேற்க வைக்கின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகன உரிமையாளர், ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 66 (1) மற்றும் பிரிவு 207இன் கீழ் அனுமதிச்சீட்டு மற்றும் பதிவுச்சான்றை மீறிய குற்றத்திற்காக வாகனம் சிறைப்பிடிக்கப்படும். மேற்கண்ட குற்றத்திற்காகச் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 421இன் கீழ் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.

மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 192 (A)இன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படலாம். சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதிச்சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உச்ச நீதிமன்ற சாலைப் பாதுகாப்புக் குழு உத்தரவின்படி ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்.

எனவே பொதுமக்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றால், மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.