ETV Bharat / state

‘எனது படங்களில் குடிப்பது போன்ற காட்சி வைத்ததில்லை’ - இயக்குநர் விக்னேஷ் சிவன் - இயக்குநர் விக்னேஷ் சிவன்

நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போன்ற காட்சிகள் எடுத்ததில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 25, 2023, 10:56 PM IST

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத் திரைப்பட போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

இந்த போட்டியில் "எழவு" என்ற குறும்படம் முதல் பரிசு பெற்றது. முதலாவதாக வெற்றி பெற்ற குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார். இரண்டாவதாக ‘அன்பு’ என்ற குறும்படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த குறும்படத்தை எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசாக வழங்கினார்.

மூன்றாம் பரிசு அன்பின் போதை மற்றும் போலீஸ் என்ற இரண்டு குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டு குரும்பட தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவணத் திரைப்படம் போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில் அதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பரிசு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
பரிசு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. இது போன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது அதற்காக தான் குறும்படமாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். சினிமாவில் போதை பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான் இது குறித்து காவல் துறை கூட அறிவுறுத்தி உள்ளனர்.

போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகள் படங்களில் வரும் பொழுது காட்சிகள் வரும் பொழுது கீழேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கார்டு போடப்படுகிறது. தற்பொழுது அது போன்ற காட்சிகள் சினிமாவில் குறைந்துள்ளது, போகப் போக அதை குறைத்து கொள்ளப்படும். சில இயக்குநர்கள் அது போன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம்” கூறினார்.

வெற்றிபெற்ற படங்களுக்கு பரிசு
வெற்றிபெற்ற படங்களுக்கு பரிசு

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையை போல கோவையில் லோகேஷ் கனகராஜ் முயற்சியில் இது போன்ற விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கும் முயற்ச்சியில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், போதை பழக்கம் உடையவர்கள் தாமாக முன்வந்து திருந்த வேண்டும் என்று நினைத்தால் மட்டும் திருந்த முடியும்.

நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை. அது போன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு கார்டு போடப்படும் ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை.

விக்னேஷ் சிவன் பேச்சு
விக்னேஷ் சிவன் பேச்சு

‘நானும் ரவுடிதான்’ படம் பாண்டிச்சேரியில் எடுத்தேன் அந்தப் படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை. என்னால் முடிந்தவரை என்னுடைய நண்பர்கள், என் படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நானும் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகள் தான் அதிகமாக படங்கள் பார்க்கிறார்கள் அவர்களை பாதிக்காத வகையிலும் தீய பழக்கத்திற்கு கொண்டு போகாத வகையில் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோமா நிலைக்கு சென்ற பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.