சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று (ஜூலை 12) நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் தரப்பு அனுப்பியுள்ளது. இந்நிலையில், 'அதிமுகவின் பொருளாளர் நான்தான், தனக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை வேறு யாரும் கையாளக்கூடாது' என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவின் பொருளாளார் ஓபிஎஸ்தான் என்றும் அதிமுக வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு நேற்றே அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
"புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பதவி செல்லாது. நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழுவும் செல்லாது. இதனால் வங்கி கணக்கை நிறுத்தி வைக்க வேண்டும்" என கரூர் வைஸ்யா வங்கிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஓபிஎஸ்? - ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்