சென்னை: அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தெலங்கானாவைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்பவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதனிடையே அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அலுவலகத்தின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அம்பத்தூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பரம்வீர் மற்றும் திவ்யா ஆகியோர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. முன்னதாக தற்கொலை செய்து கொண்ட விசாரணை கைதி ராயப்பனின் உடலை மேஜிஸ்திரேட் பரம்வீர் மற்றும் திவ்யா ஆகியோர் ஆய்வு செய்து, வீடியோ பதிவு செய்தவாறே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், ராயப்பனின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக, அவரது குடும்பத்தாரிடமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐதராபாத் கைதி சென்னையில் தற்கொலை - இறப்பில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார்