ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை - மனைவியை கொன்று கணவன் தற்கொலை

சென்னை: மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

husband-commits-suicide-after-killing-his-wife

author img

By

Published : Jun 29, 2020, 12:28 PM IST

சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர்கள் ஜெகநாதன்(75)-சுலோச்சனா(62) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் ஜெகநாதன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனைப் பார்த்த குடியிருப்புவாசிகள், அவரின் மனைவியிடம் தகவல் சொல்ல வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுலோச்சனா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.

இதையடுத்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகநாதன் ஒரு மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், மனைவி சுலோச்சனா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்தது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மாலை வாக்குவாதம் காரணமாக ஜெகநாதன் அவரது மனைவியை வீட்டிலிருந்த அரிவாளால் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: நிலத் தகராறு: தந்தையின் 2ஆவது மனைவியைக் கொலைசெய்ய முயற்சித்த நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.