ETV Bharat / state

தொடரும் ஏசி விபத்துகள்; கணவன், மனைவி தீக்காயம்! - injury

சென்னை: போரூரில் மின் கசிவு காரணமாக ஏசி வெடித்ததில் கணவன் மற்றும் மனைவிக்கு தீக்காயம் ஏற்பட்டது. தொடரும் ஏசி விபத்துக்களால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

மின் கசிவு காரணமாக ஏசி வெடித்து கணவன் மற்றும் மனைவி தீக்காயம்
author img

By

Published : Jul 3, 2019, 7:19 PM IST

சமீபத்தில் மின்கசிவினால் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் சென்னை போரூரில் மின் கசிவு காரணமாக ஏசியில் தீப்பற்றி கணவன், மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரூர் சக்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(55). இவர் தனது மனைவி பிந்து (45), மகள்கள் கிரன், ஆதித்யா ஆகியோர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். நேற்று இரவு வீட்டின் ஏசி சரியாக வேலை செய்யாததால் அதனை ஆப் செய்யாமல் அருகில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில், குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததால் ஏ.சியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்துள்ளது. தீ வீடு முழுவதும் பரவ தொடங்கியது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் கணவன், மனைவி இருவருக்கும் தீ காயம் ஏற்பட்டது.

மின் கசிவு காரணமாக ஏசி வெடித்து கணவன், மனைவி தீக்காயம்

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில், தீக்காயமடைந்த கணவன் மனைவி இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:போரூரில் மின்கசிவு காரணமாக ஏசியில் தீப்பிடித்து கணவன், மனைவி தீக்காயம். குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரத்தால் தொடரும் விபத்துக்களால் பொதுமக்கள் அச்சம்.

Body:போரூர், சக்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் மேனன்(55), அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவரது மனைவி பிந்து மேனன்(45), இவர்களது மகன்கள் கிரன் மேனன், ஆதித்யா மேனன் ஆகியோருடன் தங்கியுள்ளார் அதிகாலையில் வீட்டின் ஹாலில் இருந்த ஏ.சி. சரியாக வேலை செய்யாததால் அதனை ஆப் செய்யாமல் அருகில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டனர். குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததால் ஏ.சியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்துள்ளது. இதையடுத்து வீட்டினுள் புகை அதிக அளவில் வந்தது இதனை கண்டதும் நான்கு பேரும் அறையில் இருந்து எழுந்து வெளியே வந்தனர் அப்போது வீட்டின் ஹாலில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகை அதிகமாக இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 2 மகன்களும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் அப்போது கணவன் மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது .இது குறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்ததும் விருகம்பாக்கம் தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர் தீக்காயமடைந்த கணவன் மனைவி இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் Conclusion: போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வருவதால் மின்சாதன பொருட்களில் திடீரென தீவிபத்து ஏற்படுவதாகவும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக கடந்த மாதம் இதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்தனர் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

குறைந்த மின் அழுத்தம் காரணமாக பிரிட்ஜில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக
கடந்த மாதம் தாம்பரத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் அவரது குடும்பத்தினருடன் இறந்து போனார். ஏசியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தீக்காயங்களுடன் தம்பதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.