ETV Bharat / state

எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு 100% பணி பாதுகாப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - எம்ஆர்பி செவிலியர்

கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும்; 100 சதவீதம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 10, 2023, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2023ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் இடம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, 'உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் 2009ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் காப்பீட்டுத் திட்டங்களில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. கடந்த ஆண்டு 2022 ஜனவரி 10ஆம் தேதி அன்று 5 ஆண்டிற்கு இந்த திட்டம் நீடிக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த ஓராண்டில் மட்டும் இதன் மூலம் 1.39 லட்சம் பயனாளி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.843 என்ற வகையில் ரூ.1,128 கோடி செலவிடப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 7.49 லட்சம் பேர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைந்து இருக்கிறார்கள். மேலும், 1 கோடியே 23 லட்சம் பேர் இந்த திட்டத்தின்மூலம் கடந்த 13 ஆண்டுகளில் பயன்பெற்று இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் 970 மருத்துவமனையில் இந்த திட்டம் இருந்தது. தற்போது 1,733 மருத்துவமனையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தின் வாயிலாக 1,027 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 1,513 நோய்களுக்கு இந்த திட்டம் பயன்பட்டு வருகிறது.

சிறப்பு சிகிச்சையாக 8 சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். பல்வேறு விதமான உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு இந்த திட்டம் சிறப்பாக உதவி வருகிறது. அரசு மனநல காப்பகத்தில் உள்ள 520 பேருக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டை முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 100% அவர்களுக்குப் பணி பாதுகாப்பு என்பது இருக்கிறது. தற்பொழுது அவர்களுக்கு துறை ரீதியான மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாக 3,949 காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசாணை வெளியிட இருக்கிறோம். 3,949 செவிலியர்களும் பணியாற்றுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள 38 ஆட்சித் தலைவர்கள் தலைமையில் மாவட்ட சுகாதார சங்கங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

நாளையிலிருந்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறும். அதில் 3,949 இடங்களில் தற்போது எம்.ஆர்.பி. செவிலியர்கள் 1,800 பேருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு இந்த நேர்காணலில் 40 சதவீதம் மதிப்பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 100 சதவீதம் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம். எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு ரூ.14,000-லிருந்து ரூ.18,000ஆக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:H1N1 Virus: பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.