ETV Bharat / state

நடத்துநரைத் தாக்கிய காவலர்கள் - விசாரணைக்கு ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! - State Human Rights Commission Tamil Nadu

சென்னை: நெல்லையில் பயணச்சீட்டு எடுக்க அறிவுறுத்திய நடத்திநரைத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் வரும் 29ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

human-rights-commission-order-to-attend-inquiry-about-bus-conductor-attack-in-thirunelveli
author img

By

Published : Oct 1, 2019, 11:59 PM IST

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்தில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பணிக்காக பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பயணித்தனர்.

நடத்துநர் ரமேஷ் பயணச்சீட்டு எடுக்க அறிவுறுத்திய போது, தங்களிடம் வாரண்ட் இருப்பதாகவும் அதை நிரப்பித் தருவதாகவும் கூறி, நீண்ட நேரமாக படிவத்தை நிரப்பி தராததால் ஏற்பட்ட வாய் தகராறில் நடத்துநர் ரமேஷை ஆயுதப்படை காவலர்கள் இருவரும் தாக்கினர்.

நடத்துநர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், நடத்துநரைத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் வரும் 29ஆம் தேதி தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: பேருந்தில் நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய காவலர்கள்! - காணொலி வைரல்

Intro:Body:நெல்லையில் பயணச்சீட்டு எடுக்க அறிவுறுத்திய நடத்தினரை தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் வரும் 29ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தில் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பணிக்காக பாளையம்கோட்டை ஆயுதப்படை காவலர்கள்
மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 29 ம் தேதி பயணித்தனர்.

நடத்துனர் ரமேஷ் பயணச்சீட்டு எடுக்க அறிவுறுத்திய போது, தங்களிடம் வாரண்ட் இருப்பதாகவும் அதை நிரப்பித் தருவதாகவும் கூறி, நீண்ட நேரமாக படிவத்தை நிரப்பி தராததால் ஏற்பட்ட வாய் தகராறில் நடத்துனர் ரமேஷை ஆயுதப்படை காவலர்கள் இருவரும் தாக்கினர்.நடத்துனர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், நடத்துனரைத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் மகேஷ் மற்றும் தமிழரசன் ஆகியோர் வரும் 29ம் தேதி தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.