ETV Bharat / state

ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்கள் அளவீடும் பணி இன்று முதல் தொடக்கம் - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல் - Highcourt

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள் இன்று முதல் (அக்.29) அளவிடப்படுகிறது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்கள் அளவீடும் பணி இன்று முதல் தொடக்கம்

author img

By

Published : Oct 29, 2020, 12:10 PM IST

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்னை அடுத்துள்ள திருப்போரூரில் உள்ள அருள்மிகு கந்தசாமி கோயிலுக்கும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கும் சொந்தமாக, சுமார் 1,554 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடியாகும். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க பல மோசடி கும்பல்கள் முயற்சி செய்கின்றன.

எனவே, இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய திருப்போரூர் சார் பதிவாளருக்குத் தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணை வந்தபோது, இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்தும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு மட்டும் 1,554 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே இந்த நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அளவீடு செய்து, நிலங்களை அடையாளம் காண வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(அக்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன், "ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் இன்று (அக்.29) காலை 10 மணி முதல் அளவிடும் பணி தொடங்குவதாகவும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கூறினார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்ததோடு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அறக்கட்டளை நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.