சென்னையில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் பல்வேறு வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகக் கவசங்களை பொதுமக்கள் பலர் தவறான முறையில் அணிந்தும், கையாண்டும் வருகின்றனர்.
இந்நிலையில், முகக் கவசங்கள் பயன்படுத்தும் முறை குறித்து ஏடிஜிபி ரவி பொதுமக்களுக்கு விளக்கியுள்ளார். அதில், "குறிப்பாக சர்ஜிகல் முகக் கவசங்களை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. N95 முகக் கவசத்தை கரோனா நோயாளிகளை கவனித்து வரும் நபர்கள் கட்டாயமாக அணிய வேண்டும். குறிப்பாக முகக் கவசத்தை அணிவதற்கு முன் சானிடைசர் அல்லது சோப்பினால் கைகளை கழுவி கொண்டு அணிய வேண்டும். கழட்டும் போதும் அதே முறையை பயன்படுத்த வேண்டும்.
முகக் கவசத்தை அணிந்து கொண்டு வெளியே சென்ற பின்பு ஒருபோதும் முகக் கவச முன்பக்கத்தை தொடக் கூடாது" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 2115 பேருக்கு தொற்று