ETV Bharat / state

‘சென்னையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்தப் போகிறீர்கள்?’ - உயர் நீதிமன்றம் கேள்வி - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

சென்னை: மாநில தலைநகரான சென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி நடத்தப் போகிறீர்கள் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : May 21, 2020, 8:05 PM IST

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், பிடி ஆஷா ஆகியோரது அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காரல் மார்க்ஸ், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் தான் நடைபெறுகிறது, கல்லூரிகளில் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட மனுதாரர், கரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித் துறை நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப் போகிறீர்கள், வெளியிலிருந்து மாணவர்கள் எப்படி வர முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, நோய் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று விளக்கம் அளித்தார். மேலும், பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூன் 11ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.