ETV Bharat / state

'டி.என். சேஷனுக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும்'

author img

By

Published : Nov 11, 2019, 1:52 PM IST

சென்னை: வைகோ கட்சி தொடங்கியபோது திமுக சின்னம் முடங்காமல் காப்பாற்றியவர் டி.என். சேஷன் என கராத்தே தியாகராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தியாகராஜன்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி.என். சேஷன் நேற்று இரவு காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் சேஷன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அறிவிப்பாணை வெளியிடப்பட்டதுக்கு பின்பு புதிய கட்சியை பதிவு செய்யமாட்டார்கள். அந்த நேரத்தில் ப. சிதம்பரம் மூன்று நாள்கள் டி.என். சேஷன் இல்லத்திலிருந்து இதற்கான வேலைகளில் ஈடுபட்டார். தமாகாவுக்கு உயிர் கொடுத்தவர் டி.என்.சேஷன்.

இப்போது கே.எஸ். அழகிரி போன்றவர்கள் எம்.எல்.ஏ. ஆனதற்கு இதுதான் காரணம். தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாக சின்னம் கொடுத்து உதவியவர். 1994ஆம் ஆண்டு வைகோ மதிமுக தொடங்கியபோது திமுக சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டது. திமுக சின்னம் முடங்காமல் காப்பாற்றியவர் டி.என். சேஷன். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும். தமாகாவும் திமுகவும் அவரை மறக்க முடியாது. நன்றிக்கடனாக அஞ்சலி செலுத்த வந்தேன்" என்றார்.

சென்னை

பின்னர் சேஷன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர், "சிறந்த வகையில் தேர்தல் நடத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சேஷன். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தேர்தல் ஆணையம் என்று சொன்னால் மக்களுக்குத் தெரியாது. தேர்தல் நடத்துவது மத்திய அரசு என நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவற்றை எல்லாம் மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தி, பல நெறிமுறைகளை வகுத்து, விடிய விடிய நடைபெற்ற தேர்தல் பரப்புரைகளை சுருக்கி 10 மணிக்கு மேல் நடைபெறக் கூடாது என்பதை நடைமுறைப்படுத்தினார்.

பல சீர்த்திருத்தங்களை அவர் செய்துள்ளார். உலக அளவில் தேர்தலுக்குப் புதிய அடையாளம் கொடுத்தவர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு வடிவம் கொடுத்த டி.என். சேஷன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

Intro:முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி.என்.சேஷன் நேற்று இரவு காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Body:காங்கிரஸ் கட்சியில்
இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பேட்டி:

1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது தேர்தலுக்கான அறிவிப் பாணை வெளியிடப்பட்டது. அறிவிப்பாணை வெளியிடப்பட்டதுக்கு பின்பு புதிய கட்சியை பதிவு செய்ய மாட்டார்கள். அந்த நேரத்தில் ப.சிதம்பரம் அவர்கள் மூன்று நாட்கள் டி.என்.சேஷன் இல்லத்திலிருந்து இதற்கான வேலைகளில் ஈடுபட்டார். தமகவுக்கு உயிர் கொடுத்தவர் டி.என்.சேஷன். இப்போது கே.எஸ்.அழகிரி போன்றவர்கள் எம்எல்ஏ ஆனதற்கு இதுதான் காரணம். தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாக சின்னம் கொடுத்து உதவியவர். 1994 இல் வைகோ மதிமுக தொடங்கிய போது திமுக சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
திமுக சின்னம் முடங்காமல் காப்பாற்றியவர் டி.என்.சேஷன். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும். தமகவும் திமுகவும் அவரை மறக்க முடியாது. நன்றிக்கடனாக அஞ்சலி செலுத்த வந்தேன்.

Conclusion:Visual in live
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.