ETV Bharat / state

"ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்" ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய சென்னை நபர் கூறிய தகவல்! - poondhamali

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த கணேஷ் தான் தப்பித்த விதம் குறித்து விளக்கிய காட்சிகளும் அவரது வீட்டில் அளித்த வரவேற்பும் நம்மை பதைபதைக்க வைக்கிறது.

ஒடிசா விபத்தில் மீட்பு உதவியின்றி தப்பித்த பயணி! ரயிலின் ஜன்னல் கம்பியை பிடித்து தப்பித்ததாக பேட்டி..

author img

By

Published : Jun 5, 2023, 9:54 AM IST

ஒடிசா விபத்தில் மீட்பு உதவியின்றி தப்பித்த பயணி! ரயிலின் ஜன்னல் கம்பியை பிடித்து தப்பித்ததாக பேட்டி..

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்கு உள்ளானது. பின்னர் சரக்கு ரயில் மீது மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விழுந்த நிலையில், அதன் மீது மோதி யஷ்வந்த்பூர் விரைவு ரயிலும் விபத்துக்கு உள்ளானது. இவ்வாறு மூன்று ரயில் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து விபத்துக்குக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று ஜூன் 7-ஆம் தேதிக்குள் இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும், இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு, சென்னை அழைத்துவந்து சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஆனால், ஒடிசாவில் விபத்து நேர்ந்து சிலமணி நேரத்திலேயே அந்த விபத்தில் சிக்கிய சிலர் அங்கிருந்து தப்பித்து புவனேஸ்வர் சென்றுள்ளனர். அவ்வாறு தப்பித்த பயணிகளில் ஒருவர், சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியைச் சேர்ந்த முருகன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார்.

பின்னர் பணி முடித்து வீடு திரும்பிய அவர் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இருந்த S2 பெட்டியில் 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தோம். சரியாக 3.30 மணிக்குக் கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர், 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரியத் துவங்கியது. 10 நொடியில் அனைத்தும் முடிந்து ஓய்ந்தது. அனைவரும் அலரி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர்.

நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்ததோம். நான் இருந்த பெட்டியில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஜன்னல் கம்பியைப் பிடித்ததால் காயம் ஏதுவுமின்றி நான் உயிர் தப்பினேன். பின்னர் வெளியே வந்தோம். அனைத்தும் இருட்டாக இருந்தது. எத்தனை ரயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர். பின்னர் அங்குத் தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தேன்.

பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பேருந்து மூலம் புவனேஷ்வர் சென்றேன். பின் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, மீண்டும் பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டு கொண்டு இருந்தனர்" என்றார்.

இதையும் படிங்க: Odisha train Accident : விபத்து பகுதி மறுசீரமைப்பு... விரைவில் ரயில் போக்குவரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.