ETV Bharat / state

கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது? - moodi

எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்திட வேண்டுமென, அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் படாத பாடுபட்டார். அவர் தெலங்கானா ஆளுநரானவுடன், தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற முருகன் திமுகவின் வி.பி. துரைசாமி உள்ளிட்ட பலரை பாஜகவில் இணைத்தார்.

பாஜக
கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது?
author img

By

Published : Mar 26, 2021, 9:23 AM IST

தமிழ்நாட்டில் கோட்டையை பிடிப்பதற்கான யுத்தம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றிட வேண்டுமென்ற வேட்கையோடு அதிமுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. கேரளாவில் அக்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏகூட இல்லாத குறையை என்ன செய்தாவது போக்கிவிட வேண்டும் என்று அக்கட்சி நினைக்கிறது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் தனது கொடியை பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் பாஜக காலூன்ற முடியாத மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ்நாடு, மற்றொன்று கேரளா. மேலும், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியது. தமிழ்நாடு பாஜக தலைவரையும் மாற்றி, பிற கட்சிகளிலிருந்து முக்கியப் பிரமுகர்களை தனது கட்சிக்கு இழுப்பது, திரைப்பிரபலங்களை வலைவீசி பிடிப்பது என பிரம்மபிரயத்தனத்தில் இறங்கியுள்ளது அக்கட்சி.

எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்திட வேண்டுமென, அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் படாத பாடு பட்டார். அவர் தெலங்கானா ஆளுநரானவுடன், தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற முருகன் திமுகவின் வி.பி. துரைசாமி உள்ளிட்ட பலரை பாஜகவில் இணைத்தார்.

முருகன்
முருகன்

எம்பி சீட் கொடுக்கப்படாத அதிருப்தியில் இருந்த துரைசாமியோடு அந்தக் கணக்கு நின்றுவிடும் என்று அறிவாலயம் நினைக்க, ஆயிரம் விளக்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ கு.க. செல்வத்தை பாஜகவில் இணைத்து அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் முருகன். காங்கிரஸில் இருந்த குஷ்புவும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். மேலும், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணனும் பாஜகவில் இணைந்தார்.

வட மாநிலங்களில் அரங்கேற்றும் பாஜகவின் சித்து விளையாட்டை அக்கட்சி தமிழ்நாட்டில் அதுவும் திமுகவிலும் அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறது என்று பலரால் பேசப்பட்டது. சரவணனை கட்சியில் சேர்த்தது மட்டுமின்றி காலையில் கட்சியில் சேர்ந்த அவருக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மாலையே கொடுத்தது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தல் களத்தை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்ள பாஜக தயாராகிவிட்டது என்றே பலரால் கருதப்படுகிறது.

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை பெற்ற பாஜக வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. தற்போதைய தேர்தல் களம் இப்படி இருக்க, தமிழ்நாட்டில் இதுவரை பாஜக எத்தனை எம்.எல்.ஏக்களை கோட்டைக்குள் அனுப்பியிருக்கிறது என்பதை நினைவில் ஏற்றலாம்.

1996ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. அத்தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் பாஜக சார்பில் களமிறங்கிய வேலாயுதன் வெற்றி பெற்று முதல் பாஜக எம்.எல்.ஏவாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

வேலாயுதன்
வேலாயுதன்

பாசிச பாஜகவை வேரறுப்போம் என்ற முழக்கத்தோடு தற்போது கோதாவில் குதித்திருக்கும் திமுகவுடன் 2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலில் ஒரு எம்.எல்.ஏவாக இருந்த பாஜகவின் பலம், நான்கு எம்.எல்.ஏவாக அதிகரித்தது.

பாஜக
கே. என். லட்சுமணன், ஜெக வீரபாண்டியன், ஹெச். ராஜா

காரைக்குடியில் போட்டியிட்ட ஹெச். ராஜா, மயிலாடுதுறையில் போட்டியிட்ட ஜெக வீரபாண்டியன் (இவர் தற்போது திமுகவில் இருக்கிறார்), மயிலாப்பூரில் போட்டியிட்ட கே. என். லட்சுமணன், தளி தொகுதியில் போட்டியிட்ட கே.வி. முரளிதரன் ஆகிய பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர். தமிழ்நாட்டில் அதிகளவு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹெச். ராஜாவை எம்.எல்.ஏவாக ஆக்கியது திமுகதான் என்று இன்றுவரை மாற்றுக்கட்சியினரால் விமர்சிக்கப்படுவது இதனால்தான்.

அதற்கடுத்து வந்த 2006, 11, 16 தேர்தல்களில் பாஜக தமிழக மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. கடந்த 25 வருடங்களில் பாஜக சார்பாக, 5 எம்.எல்.ஏக்கள் இதுவரை சட்டப்பேரவைக்குள் சென்றிருக்கிறார்கள். தற்போதைய ஆளும் கட்சித் தலைமையிலான கூட்டணியில், பாஜக 20 சீட்களை பெற்றிருக்கிறது. அவற்றில் எத்தனை தாமரைகள் மலரும் என்பதற்கான பதிலோடு காலம் காத்திருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.