ETV Bharat / state

அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்; 20 நாட்களாகத் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி சிக்கியது எப்படி?

ராஜேந்திர பாலாஜி சாமி பட வில்லன் போல சினிமா பாணியில் காரை மாற்றி மாற்றி தப்பித்து வந்ததால் காவல்துறையினர் நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், காவல்துறையினர் சுற்றி வளைப்பதை அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி வேறொரு காரை வரவழைத்து அதன் மூலமாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் பயணித்த காரில் இருந்து வேறொரு காருக்கு மாறும் போது தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி கைது
ராஜேந்திர பாலாஜி கைது
author img

By

Published : Jan 6, 2022, 12:05 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்த போது ஆவின் உட்பட அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

நெருங்கியது எப்படி?

கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் நேற்று (ஜனவரி.6) கைது செய்தனர்.

மேலும், அவருடன் இருந்த ராஜேந்திர பாலாஜியின் தங்கை மகன் கணேசன், விருதுநகர் மாவட்ட தொழில் நுட்ப பிரிவைச் சேர்ந்த பாண்டியராஜன், பாரதீய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சைபர் கிரைம் போலீசாரின் உதவி

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களின் செல்போன் எண்ணையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி கைது
ராஜேந்திர பாலாஜி கைது

20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் நெருங்கியது எப்படி என்ற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன் கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அதன், பின்னர் 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கக்கூடிய நபர்களின் 600க்கும் மேற்பட்ட செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு ஆய்வு செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

சாமி பட வில்லன் போல

குறிப்பாக ராஜேந்திர பாலாஜி சாமி பட வில்லன் போல சினிமா பாணியில் காரை மாற்றி மாற்றி தப்பித்து வந்ததால் காவல்துறையினர் நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் தப்பி செல்வதாகத் தனிப்படை காவல்துறையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியோடு கண்டறிந்தனர். ஹசன் பகுதி வழியாகத் தான் மங்களூருக்கு செல்ல வேண்டும் என்பதால் மங்களூருவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதையடுத்து ஹசன் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியைத் தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரித்த போது ஸ்கோடா வெள்ளை நிற காரில் ராஜேந்திர பாலாஜி தப்பி செல்வதை தனிப்படை காவல்துறையினர் கண்டறிந்தனர். ஹசன் பகுதிக்கு அடுத்துள்ள சுங்கச்சாவடி சிசிடிவியை ஆய்வு செய்த போது அந்த கார் செல்லவில்லை என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தி அதே பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

காவல்துறையினர் வீசிய வலை

இதனையடுத்து அடுத்த சுங்கசாவடிக்கு ராஜேந்திர பாலாஜி தப்பி செல்லாத படி காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். காவல்துறையினர் சுற்றி வளைப்பதை அறிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி வேறொரு காரை வரவழைத்து அதன் மூலமாக தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஹசன் பகுதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகம் அருகே ராஜேந்திர பாலாஜி ஸ்கோடா காரில் இருந்து வேறொரு காருக்கு மாறும் போது தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். சினிமா பாணியில் கார் காராக மாறி தப்பி சென்று வந்த ராஜேந்திர பாலாஜி காரில் தப்பிச் செல்ல முயன்றபோது வசமாகச் சிக்கிக் கொண்டார்.

உதவி செய்த பாஜக பிரமுகர்

ராஜேந்திர பாலாஜி திருச்சி, கேரளா உள்ளிட்ட இடங்களுக்குத் தப்பிச்செல்ல கார் மற்றும் தங்க ரிசார்ட் ஏற்பாடு செய்து கொடுத்தது பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கர்நாடகா நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்று விருதுநகர் அழைத்து வந்தனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்த 4 பேரை அங்கேயே வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாட்ட பொதுச் செயலாளரான ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷன், விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜியின் தங்கை மகன் கணேசன் ஆகியோரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதில் நாகேஷனன் தான் ராஜேந்திர பாலாஜி தப்பி செல்ல கர்நாடக பதிவு எண் கொண்ட கார் ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவான 212- குற்றம் புரிந்தவருக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: K T Rajendra Balaji arrested: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதும் பின்னணியும்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.