ETV Bharat / state

'TANTEA' யின் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு - முதலமைச்சர் - தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'TANTEA' யின் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு  ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Nov 17, 2022, 10:36 PM IST

சென்னை: இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ’அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த 1976ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்நிறுவனத்தில், தற்போது 3,569 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், ஊழியர்களின் ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் அனைத்து பணப்பலன்களையும் விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 29.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் 1,093 நபர்கள் பலன் அடைந்துள்ளனர்.

தற்போது இக்கழகத்தில் 677 தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளைக் காலி செய்யாமல் உள்ள நிலையில், அவர்களது சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடுகளை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும், சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், பயனாளிகளின் பங்களிப்பையும் தமிழ்நாடு அரசே ஏற்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு, பணி நிறைவுறும் தருவாயில் உள்ள 573 வீடுகள், தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும். மேற்படி குடியிருப்புகளின் பயனாளர் பங்களிப்பு தொகையான 13.46 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கையின் மூலம் ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது'எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக எம்.பிக்கு ஹேப்பி நியூஸ்.. நீதிமன்றம் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.