ETV Bharat / state

சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் - பெண் காவலர்களுக்கு 9 அறிவிப்புகள்

சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
author img

By

Published : Mar 17, 2023, 4:26 PM IST

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் சமூக ஊடகங்கள் மூலமான மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு, காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு மின்-கற்றல் பயிற்சிக்காக 'அவள்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 'பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண் விழா. மிக மிக கம்பீரமாகச் சிங்கப் பெண்களைப் போல உட்கார்ந்திருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும் போது, இதைப் பார்க்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி இல்லையே என்ற ஏக்கம்தான் எனக்கு முதலில் வந்தது. பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பறித்து புத்தகங்களைக் கொடுத்தால் போதும் என்று சொன்னவர் தந்தை பெரியார். படிக்க மட்டுமல்ல, அதிகாரம் பொருந்திய பொறுப்புக்கும் பெண்கள் வர வேண்டும் என்று மனதார விரும்பியவர் அவர். ஆண்களைப் போலவே பெண்கள் "கிராப்" வைத்துக் கொள்ள வேண்டும், பேண்ட் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.

பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. பெண்கள் உயர் கல்வியைக் கற்று, தகுதிக்கேற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதைச் சட்டம் ஆக்கியவர் அவரே. தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முதலாக பெண்களும் காவலர் ஆகலாம் என்பதை உருவாக்கி, காக்கி பேண்ட் சட்டை அணிய வைத்து பெண்கள் கையில் துப்பாக்கியையும் ஏந்த வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றால், இதற்கான விதையை விதைத்தவர் கருணாநிதி.

ஆண் காவலர்கள் - பெண் காவலர்கள் என்று பிரித்துப் பார்ப்பதாக ஆண் காவலர்கள் தயவு செய்து நினைத்துவிடக் கூடாது. காவல் பணியோடு சேர்த்து குடும்பப் பணிகளையும் செய்தாகவேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திட வேண்டும்" என்றார்.

9 அறிவிப்புகள்: தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பெண் காவலர்கள் நலனுக்காக 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து பேசிய அவர், "பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனி காலை 7 மணி என்பதற்கு பதிலாக, 8 மணி என மாற்றியமைக்கப்படும். சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும். அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.

பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும். பெண் காவலர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய கருணாநிதியின் நினைவாக, அவரது பெயரில் கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும். ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும் போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும். பெண் காவலர்களின் தேவைகள், பிரச்னைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, "காவல்துறையில் பெண்கள்" எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும். பெண் காவலர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் "பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு" (Career Counselling) அமைக்கப்படும்" என கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.