ETV Bharat / state

இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்! - இயக்குநர் சங்கர்

இயக்குநர் சங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம்..!

author img

By

Published : Aug 2, 2022, 5:29 PM IST

தமிழ்சினிமாவில் முக்கிய இயக்குநராகத் திகழும் இயக்குநர் சங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேல்ஸ் பல்கலைக்கழகம், “ சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறைக்கு பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் மக்கள் போற்றும் ஒரு கலைஞனைத்தான் இன்று நாம் போற்றுகிறோம்.

கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத்தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார். இவரின் திறமை இவரை தனித்து அடையாளப்படுத்தி பல கைதட்டல்களையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத்தூண்டியது. பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப்பெற்றார். இவரின் திறமை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. அவர் அவரை உதவியாளராக அழைத்துக்கொண்டார்.

1986 - 87-களுக்குப் பிறகு, இவர்தம் சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப்படங்களை எடுத்து திரை இயக்குநரானார். 1993இல் வெளியான ஜென்டில்மேன், என்ற திரைப்படம் இயக்குநர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த்திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டது.

தொடர்ந்து வெளி வந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன்... என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர்ஸ்டார்களை கொண்டு வெற்றிமேல் வெற்றி சூடியவர். அவரது படங்கள் ஃபிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரமாண்டப் பெருமிதம் எப்போதும் தமது இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன் தயாரிப்பாளராகவும் பரிமாணங்களைப்பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: '''விஜயானந்த்' படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது'' - நெகிழும் கன்னடத் தயாரிப்பாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.