ETV Bharat / state

ரூ.4600 கோடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் - ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ஆம் கட்ட பணிகள் குறித்து ஸ்டாலின் பேச்சு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் ரூ.4600 கோடி மதிப்பில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
author img

By

Published : Jan 20, 2022, 5:54 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.20) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் 13 ஆயிரத்து 587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 லட்சத்து 88ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின், "தர்மபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும்.

ஒன்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்; மற்றொன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டத்தை தொடங்கி வைத்தது.

அதிமுக அரசு கிடப்பில் போட்டது

கிருஷ்ணகிரி - தர்மபுரி மக்களின் மிகப்பெரிய குறையாக இருந்த குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது.

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 80 விழுக்காட்டுப் பணிகள் நடைபெற்று முடிந்தன. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இனி மீண்டும் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் ரூ.4600 கோடி மதிப்பில் செயலப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் கோட்டையூர் - தர்மபுரி ஒட்டனூர் இடையே ரூ.250 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

தர்மபுரி பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும்.

சிப்காட் தொழில் பூங்கா, தர்மபுரி ஆட்சியர் வளாகத்தில் ரூ. 40 கோடி மதிப்பில் கூடுதல் அலுவலக கட்டடம் ஆகியவை அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அன்பழகன் வீட்டில் சோதனை: திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.