ETV Bharat / state

சென்னைக்கு வந்த ஹாக்கி உலகக் கோப்பை - Hockey trophy release ceremony in Chennai

அடுத்தாண்டு இந்தியாவில் ஹாக்கி உலகக்கோப்பை நடைபெற உள்ளதை ஒட்டி, கோப்பை சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னையில் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னையில் ஹாக்கி உலகக் கோப்பை
author img

By

Published : Dec 21, 2022, 11:05 AM IST

Updated : Dec 21, 2022, 12:22 PM IST

சென்னையில் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை: ஹாக்கி உலகக் கோப்பை போட்டி, வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமான மூலம் ஹாக்கி கோப்பை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார். அதன்பின் சென்னை விமான நிலையத்திலிருந்து, வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஹாக்கி கோப்பையை காண்பிக்க உள்ளனர்.

அதன்பின் இன்று மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது. அதோடு சென்னையில் பல்வேறு இடங்களில் ஹாக்கி உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இறுதியாக வேறு மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

இதையும் படிங்க: 'மைதானம் வேணும்' - அமைச்சர் உதயநிதிக்கு பாக்ஸிங் தங்க மங்கை கோரிக்கை

Last Updated : Dec 21, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.