ETV Bharat / state

செப்டம்பர் முதல் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வக வகுப்பறைகள்! - பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 6000 அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் செப்டம்பர் மாதம் முதல் கணினி ஆய்வக வகுப்பறைகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை
author img

By

Published : Aug 2, 2019, 9:49 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கணினிகள் மூலம் பாடம் நடத்துவதற்கான ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலை கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் கருப்பசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கணினி ஆய்வக வகுப்பறைகள்

மேலும், ஆசிரியர்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம், ஆய்வகப் பணிகள் நிறைவடைந்த பிறகு வரும் செப்டம்பர் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வக வகுப்பறைகள் செயல்பாட்டிற்குவரும் என இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

Intro:அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் துவக்கம்Body:அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் துவக்கம்

சென்னை,

தமிழகத்தில் உள்ள 6000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செப்டம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் வகுப்புகள் துவங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பாடம் நடத்துவதற்கு ஆய்வகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடி சார்ந்த பேராசிரியர்கள் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த முறைகளில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ,தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் கூறும்போது, தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பது குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி சார்ந்த பேராசிரியர்கள் எவ்வாறு கம்ப்யூட்டர் மூலம் பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகம் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.