சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், "துடைத்து கிடந்த காலி பாத்திரத்தை அட்சய பாத்திரமாக மாற்ற வந்தவர் தான் முதலமைச்சர்.
அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்காக ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருத்தேர், நந்தவனம் பணிகள் செய்திட ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த 120 நாள்களிலேயே 641 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் ரூ.1,000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும்.
நாகர்கோவிலில் மூடிக்கிடந்த இந்து நூலகம் திறக்கப்பட்டது. 11 ஆயிரத்து 665 ஒருகால பூஜை நடத்தும் அர்ச்சகர்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் 10 கிலோ அரிசி, 15 மளிகை பொருள்கள் தொகுப்பு கொடுத்தவர்.
கடந்த ஆட்சியில் ஆலங்குடி, வேதாரண்யம், காஞ்சி, ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் செயல்படுத்தாத யாத் நிவாஸ் பணிகள் முழுமையாக 1 மாதத்தில் முடித்து திறக்கப்படும். கடந்த ஆட்சியில் ரோப்கார் பணிகள் முழுமையாக முடிக்காமல் விட்டதை ,நாங்கள் ஆய்வு செய்து விரைவில் முழுமையாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
கடந்த ஆட்சியில் கோவை மருதமலையில் லிப்ட் அமைக்க முறையாக டெண்டர் விடாமல் பணிகள் முடிக்கவில்லை. அதையும் நாங்கள் முறையாக டெண்டர் விட்டு விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
கடந்த ஆட்சியில் எந்த எந்த பணிகள் முடிக்காமல் விட்டுச்சென்றார்காளோ அதை நாங்கள் விரைந்து முடித்துக்காட்டுவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆபத்தான தொழிற்சாலைகள் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு- சி.வி. கணேசன்