சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பிரதமர் செய்த திட்டப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்று நான்கு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அமைப்பு பிரதான் மந்திரி ஜன கல்யாண் கார் யோஜனா.
பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்த அமைப்பானது, விவசாய திட்டத்திற்கான அடையாள அட்டை பெறுவது, பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியம் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் இந்த அமைப்பின் கமிட்டிகள் அமைக்கப்பட்ட பின்னர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 48 நாட்கள் மோட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடக்கவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் தமிழர்களால் வாழ முடியவில்லை...!'