தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறை சார்பில் 500 புதிய அரசு பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பேருந்துகளில் அவசர வழி, தீயணைப்பான் உள்ளிட்ட வார்த்தைகளை தமிழில் எழுதுவதற்கு பதில் ஆங்கிலம், இந்தியில் இடம் பெற்றுள்ளது காண்போரை அதிர்ச்சியும், ஆத்திரமுமடைய வைத்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "தமிழக மக்களின் வரி பணத்தில் புதிய பேருந்து வாங்கியிருந்தும் தமிழ் வார்த்தைக்கு இடமில்லை, மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு புறம் என்றால், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அதிமுக இந்தியை திணிப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்". எனினும், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.