ETV Bharat / state

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: மக்களின் கருத்துகளின் படியே நடவடிக்கை - ஏ.வ வேலு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில், மக்களின் கருத்துகளின் படியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது கூறிய அதே நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: மக்களின் கருத்துக்களின் படியே நடவடிக்கை

author img

By

Published : Apr 12, 2022, 10:41 PM IST

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில், மக்களின் கருத்துகளின் படியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது கூறிய அதே நிலைப்பாட்டிலேயே இப்போதும் இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று(ஏப்.12), பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசிய மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார், சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன, என கேள்வி எழுப்பினார்.

மக்களின் நிலைப்பாடே எங்களின் நிலைபாடு: இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு,

”சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்டம் என்பது 6 வழிச்சாலையாக ஏற்கனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

அதேவேளையில் தமிழ்நாடு முதலமைச்சரைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கின்றோம். 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதி மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே, திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அப்போதைய நிலைப்பாடே எங்களது இப்போதைய நிலைப்பாடு” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'CUET' நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.