உயர் கல்விச் சேர்க்கையில் தேசிய அளவில் முதலிடத்திலிருந்த தமிழ்நாடு, இந்தாண்டு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் இரண்டாமிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலர் மங்கத் ராம் சர்மா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 48.5 விழுக்காடு உள்ளது. ஆனால் சமீபத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை 60 விழுக்காடு அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20 விழுக்காடு கூடுதலாக அதிகரித்துவருகிறது. எனவேதான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானவுடன் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துவருகிறோம்.
இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்வார்கள். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம். ஆகவே, அவற்றுடன் தமிழ்நாட்டை ஒப்பிட முடியாது” என்றார்.
இதையும் படிங்க: ‘பிகில்’ இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு நோட்டீஸ்!