ETV Bharat / state

புதிதாக கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் - காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

author img

By

Published : Jun 25, 2019, 3:49 PM IST

சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்லூரிகளின் கட்டடங்களை, முதலமைச்சர் பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

பழனிசாமி

உயர்கல்வித் துறை சார்பில் பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ஒன்பது கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரி ,பர்கூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியிலும், சென்னை- சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திலும், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பத்து கல்லூரிகளில், 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இதன்பின் பேசிய அவர், தமிழ்நாட்டை அறிவுசார், தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக இந்த எட்டு ஆண்டுகளில் 56 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம்.

மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 விழுக்காடுகளை பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது என தெரிவித்தார்.

Intro:உயர்கல்வித்துறையில் பல்வேறு கட்டிடங்கள்
முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார் Body:

சென்னை,
உயர்கல்வித் துறை சார்பில் பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக்கூடம், நிர்வாகப் பிரிவுக் கட்டடம் மற்றும் இதர கட்டடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்துள்ளார்.

தமிழகத்தை அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையிலும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் , பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு
48.6 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.
, கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும்,
பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியிலும், நரியனேரி- திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,
திருவண்ணாமலை - அரசு கலைக் கல்லூரியிலும், சென்னை- சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திலும், வியாசர்பாடி - டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியிலும், சேப்பாக்கம் - மாநிலக் கல்லூரியிலும் என 185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.