ETV Bharat / state

அறநிலையத்துறைக்கு கோவில் நிதியில் இருந்து செலவு செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் - அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறை கோவில்நிதியில் இருந்து பயன்படுத்த கூடாது - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Jan 26, 2023, 6:53 AM IST

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர், கோவில் நிதியில் அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலையம் விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களைச் சமர்ப்பித்தார்.

கோவில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோவில் நிதியை அறநிலையத்துறைக்காகப் பயன்படுத்துவதாகவும், எந்த தயக்கமும் இல்லாமல் கோவில் நிதியை அரசு நிதி போலப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். சிறப்புத் தணிக்கை செய்தால் அத்தனை விஷயங்களும் அம்பலத்துக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கோவில் நிதி, தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது எனவும், அறநிலையத்துறை செலவுகளுக்குத் தொகுப்பு நிதியில் செலவழிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகளைக் கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது எனவும், கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை எடுக்க முடியாது எனவும் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையைப் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:6 தமிழர்கள் உள்பட 26 பேருக்கு பத்ம விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.