சென்னை: மேற்கு அண்ணா நகரைச்சேர்ந்த மனோஜ், தனது மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால், சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். அங்கு சான்றிதழ் வழங்கப்படாததால், மகனுக்கு சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு வந்தபோது, சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டதாக தாசில்தாரர் அளித்த கடிதத்தை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:பானையில் நீர் அருந்தியமைக்கு மாணவன் கொல்லப்பட்ட விவகாரம்... கடும்நடவடிக்கை எடுக்க என்சிபிசிஆர் வலியுறுத்தல்