ETV Bharat / state

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

High Court
High Court
author img

By

Published : Feb 4, 2021, 10:16 PM IST

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், புகார்கள் குறித்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அமைச்சர் மீதான புகாருக்கு முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில், இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று, இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(பிப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.