ETV Bharat / state

மயான பாதையை எதிர்த்து கலாஷேத்ரா வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்! - high court

கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் பொதுப்பாதையில் மாநகராட்சி சாலை அமைப்பதை எதிர்த்து கலாஷேத்ரா அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கலாஷேத்ராவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

author img

By

Published : Jun 12, 2023, 6:19 PM IST

சென்னை: சென்னை திருவான்மியூரில், மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை. இதன் அருகில் தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்குச் செல்லும் பொதுப்பாதை அமைந்துள்ளது.

இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 செண்ட் பரப்பில் அமைந்துள்ள பாதைக் குத்தகைக்கு வழங்கப்பட்டதுடன், மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையடுத்து, இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிலம் ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது? என விளக்கமளிக்கக்கோரி கலாஷேத்ராவுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்த வழக்கில், வளாகத்தின் தென் மேற்கு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை மயானம் அமைக்க ஒதுக்கும்படி, கலாஷேத்ராவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.அதன்படி 1990ம் ஆண்டு 1 ஏக்கர் 16 செண்ட் நிலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பின் கலாஷேத்ராவின் பயன்பாட்டிலிருந்து வந்த 1 ஏக்கர் 46 செண்ட் பாதை நிலம், 2004 வரை 1 கோடியே 66 லட்சம் ரூபாய்க் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

கல்வி நிறுவனம் என்பதால், இந்த பாதை நிலத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி கலாஷேத்ரா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நில நிர்வாக ஆணையர், நிலத்தை வழங்க 2010ம் ஆண்டு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சென்னை மாநகராட்சி, பொது பாதையில் சாலை அமைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் வனிதா ஜாய்ஸ் ராணி ஆஜராகி, இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது எனவும், மக்கள் பயன்படுத்தக்கூடிய மயானத்துக்குச் செல்லக்கூடிய பாதை என்றும், இதை கலாஷேத்ராவுக்கு கொடுத்தால் மயானத்துக்குச் செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,1990ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்ற கலாஷேத்ரா அறக்கட்டளையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்பு நீதி கேட்டு போராட்டம்.. குண்டுகட்டாக கைது செய்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.