கரோனா ஊரடங்கால் மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு விழுக்காட்டைக்கூட தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கூறியிருந்ததை மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
அவரது வாதத்தை மறுத்த தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரபாவதி, தமிழ்நாட்டில் 5.66 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 58 ஆயிரத்து 509 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவர்களில், 4.60 லட்சம் தொழிலாளர்களுக்கு மே மாதம் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் 4.67 லட்சம் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், இவை அனைத்தும் காகிதத்திலேயே இருப்பதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு மீது மத்திய உணவுத் துறை அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். பின்பு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கவுன்சிலிங் மையம் - தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு!
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கவுன்சிலிங் மையங்கள் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.