சென்னை: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ள நிலையில் வானகரத்திலுள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டப வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அரங்கத்தின் முன் பகுதியில் கோட்டை போன்று பிரம்மாண்டமாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுக்குழு நடைபெறும் இடம் முழுவதும் ஓபிஎஸ் படங்கள் ஏதும் இடம் பெறவில்லை, ஈபிஎஸ் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
மேலும் பொதுகுழுவை சாராதவர்கள் உள்ளே நுழைந்து அசம்பாவிதம் செய்யாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, சோதனை செய்து உள்ளே அனுப்ப பிரத்தியேகமாக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில், நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்பது தெரியவரும். ஆனால், பொதுக்குழு நடைபெறும் என்ற நம்பிக்கையோடு முழு வீச்சில் பணிகள் நடைபெறுகிறது.
இந்த ஆய்வில் கே.பி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி உதயகுமார், வேலுமணி, தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் ,பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: வானகரத்தில் அதிமுக பொதுக்குழு - போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு - வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை