சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் திருநீர்மலை பிரதான சாலையில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
வினோத்குமார், தினமும் வீட்டில் இருந்து கடைக்கு செல்லும் வழியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற ஒருவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக தினமும் மூன்று வேளையும் உணவு அளித்து வந்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவருடன் சைக்கிள் கடைக்காரர் இன்று(ஜூலை25) வழக்கம் போல் காலையில் உணவு வழங்க அவர் அச்சாலையில் செல்லும்போது அவரிடம் ஆதரவற்றவர் தனக்கு வேலை வழங்கும்படி கூறியுள்ளார்.
உடனே அவரை கடைக்கு அழைத்துச் சென்ற வினோத்குமார் அவருக்கு முடி வெட்டி, குளிக்க வைத்து சைக்கிள் கடை உதவியாளராக வேலையும் வழங்கியுள்ளார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் வினோத்குமாரை பாராட்டினர். இச்செயல் சமூகவலைதளத்தில் வைரலாகியதையடுத்து வினோத்குமாருக்கு பாராட்டுகள் குவிகிறது.
இதையும் படிங்க: குருவி கூட்டை கலைக்க மனமில்லை: கும்மிருட்டில் வாழும் கிராம மக்கள்!