சென்னை: இது குறித்துப் பேசிய செந்தில்குமார், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் மாநகராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணத்தை வசூல் செய்யும் பணியில் கடந்த 33 ஆண்டுகள் பணிபுரிந்து வருவதாகவும், திடீரென்று ஜனவரி 4ஆம் தேதி தன்னைப் போன்ற 47 பேரை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து சென்னை மாநகராட்சி நீக்கியது என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுதொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவிலும், எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோதும் தனித்தனியே கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி பார்க்கிங் டெண்டரை தனியாருக்கு வழங்கியதால் எங்கள் வேலை பறிபோனது, எங்களுக்கு இதை தவிர வேறு வேலை தெரியாது, எனவே மீண்டும் எங்களை பணியில் அமர்த்த வேண்டும் என முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு'