ETV Bharat / state

'மூன்று மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை' - சென்னை வானிலை ஆய்வு மையம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: இலங்கை, குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy-rain-warning-in-three-districts-chennai-meteorological-center

author img

By

Published : Jan 10, 2021, 1:43 PM IST

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் கடலூர், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜன.11) ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை ) , திருவாடனை (ராமநாதபுரம் ) ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும், ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம் ), மணமேல்குடி (புதுக்கோட்டை ) ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை, ஜனவரி 10 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் , குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்: ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் உடல் தகனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.