ETV Bharat / state

வளிமண்டல சுழற்சி:மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : May 10, 2021, 3:35 PM IST

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதியில் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக இன்று (மே.10) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (மே.11) சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 12ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 13 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 14, 15 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

11.05.2021 முதல் 13.05.2021 வரை மேற்கு, வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழ்நாடு கடலோர, அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும். சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):

இரணியல் (கன்னியாகுமரி) 7, நாகர்கோயில் (கன்னியாகுமரி) 5, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) 4, சமயபுரம் (திருச்சி) 3, சோழவந்தான் (மதுரை), புதுக்கோட்டை, மானாமதுரை (சிவகங்கை), சிவகாசி (விருதுநகர்), சூரங்குடி (தூத்துக்குடி) தலா 2, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர்), திருமானூர் (அரியலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

கேரளா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 14-05-2021 அன்று தென் கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

இதன் காரணமாக 10-05-2021 முதல் 12-05-2021 வரை மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

13-05-2021 அன்று மத்திய தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்பொழுது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14-05-2021 அன்று மத்திய தெற்கு அரபிக்கடல், குமரிக்கடல், மாலத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்பொழுது 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐந்து மீனவர்களை காப்பற்றிய இந்திய கடலோர காவல்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.