தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Black thunder,
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mount road,
Chennai!#chennairains pic.twitter.com/DzZQ3OOgLK
">Black thunder,
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) October 29, 2020
Mount road,
Chennai!#chennairains pic.twitter.com/DzZQ3OOgLKBlack thunder,
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) October 29, 2020
Mount road,
Chennai!#chennairains pic.twitter.com/DzZQ3OOgLK
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்படுமா? - வெதர்மேன் பிரதீப்ஜான் விளக்கம்!