சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக.26) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது.
மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை, புறநகர்ப் பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருகிறது.