சென்னை: குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரமாகத் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
#RedAlert
— India Meteorological Department (@Indiametdept) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Heavy to Very Heavy with Extremely heavy falls (above 204.4 mm) likely to continue over South Tamil Nadu on 18th December. pic.twitter.com/6kscTI0j2A
">#RedAlert
— India Meteorological Department (@Indiametdept) December 18, 2023
Heavy to Very Heavy with Extremely heavy falls (above 204.4 mm) likely to continue over South Tamil Nadu on 18th December. pic.twitter.com/6kscTI0j2A#RedAlert
— India Meteorological Department (@Indiametdept) December 18, 2023
Heavy to Very Heavy with Extremely heavy falls (above 204.4 mm) likely to continue over South Tamil Nadu on 18th December. pic.twitter.com/6kscTI0j2A
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மேலப்பாளையம், பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என்ஜிஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 18, 2023
">— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 18, 2023
கடந்த 24 மணி நேரத்தில் 17-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 18-ஆம் தேதி காலை 8.30 வரை பெய்த மழையின் அளவு என்பது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழையும், திருச்செந்தூர் 69 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை: காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் விழுவதை விட அதிகமான அளவு). இது தூத்துக்குடியில் ஆயிரம் ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இது புயல் கூட இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லை. ஒரு புயல் சுழற்சியில் இருந்து பெய்யும் மழை.
-
Kayalpattinam in Thoothukudi records 932 mm in 24 hrs. (This is more than their annual rainfall falling in a day).
— Tamil Nadu Weatherman (@praddy06) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is the highest ever rainfall recorded in plains ever in Tamil Nadu in 24 hrs & the 2nd highest rainfall after the Kakkachi (manjolai) 965 mm recorded in 1992. pic.twitter.com/jDytLp6OFl
">Kayalpattinam in Thoothukudi records 932 mm in 24 hrs. (This is more than their annual rainfall falling in a day).
— Tamil Nadu Weatherman (@praddy06) December 18, 2023
This is the highest ever rainfall recorded in plains ever in Tamil Nadu in 24 hrs & the 2nd highest rainfall after the Kakkachi (manjolai) 965 mm recorded in 1992. pic.twitter.com/jDytLp6OFlKayalpattinam in Thoothukudi records 932 mm in 24 hrs. (This is more than their annual rainfall falling in a day).
— Tamil Nadu Weatherman (@praddy06) December 18, 2023
This is the highest ever rainfall recorded in plains ever in Tamil Nadu in 24 hrs & the 2nd highest rainfall after the Kakkachi (manjolai) 965 mm recorded in 1992. pic.twitter.com/jDytLp6OFl
இது 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992-ல் மாஞ்சோலையில் பதிவான 965 மி.மீ மழைக்கு அடுத்து 2வது அதிகபட்ச மழையும் ஆகும்” எனத் தமிழ்நாடு வெதர் மேன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு... வெள்ள அபாயத்தில் தூத்துக்குடி!