ETV Bharat / state

மிரட்டும் மிக்ஜாம் புயல்..! 6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! - திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுமுறை

Michaung Cyclone: மிக்ஜாம் புயல் காரணமாகக் கன மழை பெய்து வருவதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain due to Michaung Cyclone holiday for School and college in 6 districts
மிக்ஜாம் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 7:11 AM IST

Updated : Dec 4, 2023, 7:42 AM IST

சென்னை: வங்கக்கடல் பகுதியில் டிசம்பர் 2ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச.3) புயலாக வலுப்பெற்றது. இந்த மிக்ஜாம் புயலானது இன்று (டிச.4) தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரையோர பகுதிகளில் நிலவும் என்று கூறப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாகக் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்து இருந்தது. மேலும், இன்று புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  • Rains to continue in Chennai, Tiruvallur, Kanchipuram and Chengelpet Districts as the cyclone moves North-North westwards
    புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. pic.twitter.com/ErMLMnrTko

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் மிக்ஜாம் புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இந்த மிக்ஜாம் புயலானது 5ஆம் தேதி நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார் கோட்டத்திற்கு உட்பட்ட செய்யார், வந்தவாசி, சேத்பட், வெம்பாக்கம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?

Last Updated : Dec 4, 2023, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.