Heavy rains lash Chennai: ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று (டிசம்பர் 30) காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் அதிகபட்சமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் 11 செ.மீ. மழை பதிவானது. மேலும், மீனம்பாக்கத்தில் 4 செ.மீட்டரும், சத்யபாமா, அண்ணா பல்கலைக்கழகப் பகுதியில் தலா 1 செ.மீட்டரும், சிதம்பரத்தில் 3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின்போது சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பின.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், "காற்று கிழக்குத் திசையை நோக்கி நகரும்போது கடலின் அலையில் 'யு' வடிவ மேலடுக்குச் சுழற்சி உருவாகும். இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Female infanticide: உசிலம்பட்டியில் பெண் சிசுக் கொலை?