ETV Bharat / state

சென்னைக்கு பிரதமர் மோடி வருகை - 5 அடுக்குப்பாதுகாப்பு... ட்ரோன்கள் பறக்கத்தடை...! - 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் பிரதமர் மோடி வருகையையொட்டி, ஐந்து அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
பலத்த போலீஸ் பாதுகாப்பு
author img

By

Published : May 25, 2022, 5:41 PM IST

சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை (மே 26) மாலை பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார். சுமார் 2 மணி நேரமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

சென்னைக்கு பிரதமர் மோடி வருகையை ஒட்டி, ஐந்து அடுக்கு காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 22ஆயிரம் காவல் துறையினர் இன்று இரவு முதல் நாளை இரவு வரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்கத்தடை: பிரதமர் வரும் பாதை முழுவதும் பிரதமரின் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, சென்னை காவல் துறையுடன் இணைந்து ஒத்திகை நடத்தியுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பெரியமேடு பகுதி முழுவதும் குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறையினர், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நேரு விளையாட்டரங்கில் நிகழ்ச்சி நடைபெறுவதால் சென்ட்ரல் ரயில் நிலையம், இறங்கும் விமான நிலையத்திற்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,450 தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - தேனி ரயில் போக்குவரத்து - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.