ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி வரை, வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Met office
Met office
author img

By

Published : Mar 30, 2022, 5:12 PM IST

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளைக் கண்டறியும் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.