சென்னை: இதய நோய் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் இறக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், உலக இதயக் கூட்டமைப்பு ‘உலக இதய தினத்தை ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது. மேலும், மக்களிடையே இதய நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இருதயப் பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 காவலர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனை முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் மற்றும் இருதயவியல் துறை பேராசிரியர் ஜஸ்டின்பால் கூறியதாவது, “உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இருதயப் பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இருதய ஆபத்துள்ள காவலர்களை பரிசோதனை மேற்கொள்ளது தொடர்பாக சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையரிடம் பேசியுள்ளோம்.
அதன்படி வருகிற 29ஆம் தேதி முதல் அடுத்து ஒரு மாதத்திற்கு, நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 பேர் என 600க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இருதயப் பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம். கூடுதலாக காவலர்களுக்கு பரிசோதனை தேவைபட்டால், இந்த முகாமினை 2 மாதம் நடத்த இருக்கிறோம்.
இந்த சிறப்பு முகாமில் மூத்த இருதய நிபுணர்கள் கொண்டு இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பரிசோதனைக்கு பிறகு மருத்துவ தேவை இருந்தால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
மனித உடலில் உள்ள இதயத்தின் அளவு 450 கிராம் மட்டுமே. ஆனால், இதுதான் மனிதனுடைய வாழ்க்கையை இயங்கச் செய்யும் முக்கிய உறுப்பு ஆகும். இந்தியாவில் 1,000 பேருக்கு 275 பேர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!