ETV Bharat / state

தடுப்பூசியால் குழந்தை மரணமா? - ராதாகிருஷ்ணன் விளக்கம்! - health secretary radhakrishnan on kovai baby death

சென்னை: கோயம்புத்தூரில் 'பெண்டாவேலண்ட்' என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு குழந்தை இறந்ததற்கும் கரோனா தொற்றுக்கும் சம்மந்தம் இல்லை எனவும், குழந்தையின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Feb 19, 2021, 10:41 AM IST

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இரண்டாம் முறையாக கரோனா தடுப்பூசியை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே போட்டுக்கொண்டார். இதற்கிடையில் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாள் ஒன்றுக்கு 19 முதல் 20 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 39 ஆயிரத்து 143 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 090 பேர் சுகாதாரப் பணியாளர்கள். 33 ஆயிரத்து 414 பேர் முன்னிலை பணியாளர்கள். 22 ஆயிரத்து 639 பேர் காவல் துறையினர். தமிழ்நாட்டில் 35 இடங்களில் கோவேக்சின் செலுத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
தமிழ்நாட்டில் 14.8 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. பிரேசில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு வரும்போதே அந்தந்த நாடுகளில் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே

கோயம்புத்தூரில் 'பெண்டாவேலண்ட்' என்ற தடுப்பூசி செலுத்தி குழந்தை இறந்துள்ளது. கரோனா தொற்றுக்கும் குழந்தையின் உயிரிழப்புக்கும் எந்தவித சமந்தமும் இல்லை. குழந்தையின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: அங்கன்வாடியில் ஊசிபோட்ட குழந்தை மரணம் - காரணம் என்ன?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.